விரைவில் மீண்டும் சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணி?

மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இப்படம் உருவான விதம் பற்றி இயக்குநர் மோகன்ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் பேசினர். தனிஒருவன் படம் பார்த்தபிறகு இயக்குனர் மோகன்ராஜாவை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டுள்ளார். 'அதை ஏற்றுக்கொண்டு உருவானது தான் வேலைக்காரன்' என சிவகார்த்திகேயன் கூறினார். மேலும் இயக்குனர் மோகன் ராஜா, சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக மேடையிலேயே அறிவித்தார்.