விரைவில் விஜய்யுடன் இணைவேன் – சிறுத்தை சிவா !

அஜித்தை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவா, தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்கும் வேலையில் இருக்கிறார். அஜித்துடன் நான் நான்கு படங்கள் செய்தது இறைவன் கொடுத்த பாக்யம் என்றே சொல்வேன்.  ஒரு படத்தின் சக்ஸஸ் குறித்து நாங்கள் பேசுவதே இல்லை. எங்களுக்குள் இருந்த மியூச்சுவல் ரெஸ்பெக்ட்தான் எங்களை சேர்த்து பயணிக்க வைத்து இருக்கிறது. அஜித்சாரின் தொழில்பக்தியை நான் ரொம்ப ரொம்ப மதிப்பேன். இந்தப் புரிதல்தான் இருவருக்குமான தொடர்ந்து நான்கு படங்களுக்கான சந்தோஷமான பயணம். எங்கள் இருவருக்குமே சென்னை சாலிகிராமம் சொந்த ஏரியா என்பதால் என் அப்பா ஜெயக்குமாரும் விஜய்சார் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் நல்ல நண்பர்கள். எனக்கும் விஜய்சாருக்கும் காமன் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் உண்டு. விரைவில் விஜய்சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் இவ்வாறாக சிறுத்தை சிவா கூறினார்.