வில்லனாக மாறும் வடிவேலு

ஜி.வி.பிரகாஷ் தற்போது சுமார் பத்து படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.இதில் ப்ரூஸ்லீ மற்றும் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் ரிலீஸ்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் தில்லுக்கு துட்டு பட இயக்குநர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக​ தகவல் வெளியானது.தற்போது இப்படத்தில் வடிவேலுவின் காதாபாத்திரம் குறித்த​ தகவல் வெளியாகியுள்ளது.இதில் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளதாக​ தெரியவந்துள்ளது.