வில்லன் ஆக பயந்த நடிகர் !

சீமராஜா, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர், ரகு ஆதித்யா. சமீபத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவர் கூறுகையில், 'வில்லன் வேடம் ஏற்று நடிக்க முதலில் தயங்கினேன். ஆனால், மதுரையிலுள்ள தியேட்டரில் தேவராட்டம் படத்தை பார்த்தபோது, கவுதம் கார்த்திக் என்னை கொன்றபோது மக்கள் கைத்தட்டினர். இப்படி வெறுப்பை சம்பாதித்தால் மட்டுமே வில்லனாக சாதிக்க முடியும் என்று புரிந்துகொண்டேன். தற்போது மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறேன். வில்லன் மற்றும் காமெடி வேடத்தில் நடிக்க ஆசை’ என்றார்.