வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் ஆசைப்பட்டேன் – சத்ரு படம் குறித்து கதிர்!

“சத்ரு ஒரு க்ரைம் திரில்லர் படம். போலீசுக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் ஆட்டம்தான் படம். முதல் காட்சியில் இருந்து படம் விறுவிறுப்பாக இருக்கும். சிருஷ்டி டங்கே இதில் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். வில்லனாக லகுபரண் நடித்துள்ளார். ஹீரோ அளவுக்கு, வில்லனுக்கும் இதில் முக்கியத்துவம் இருக்கும். அதனால் முதலில் கதையை படித்தவுடன், வில்லனாக நடிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என சமரசம் செய்தார். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் இதில் சக்தி வாய்ந்ததாக இருக்கும். பரியேறும் பெருமாள் எனக்கு வாழ்நாள் படம். அது போன்ற ஒரு படம் மீண்டும் எனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் பரியேறும் பெருமாள் மீது நான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை. ஆனால் மக்கள் அந்த படத்தை மிகப்பெரிய இடத்தில் தூக்கி வைத்துவிட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு எனது நடிப்பில் வெளிவந்த படம் சிகை. ஒரு திருநங்கையாக அதில் நான் நடித்தேன்.  திருநங்கைகளின் வாழ்க்கையை, வலியை அது உணர்த்தும். எனது சினிமா வாழ்வில் தளபதி 63 படமும் மிக முக்கியமானது. விஜய் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. நான் நினைத்ததைவிட நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இவ்வாறு கதிர் கூறினார்.