வில்லன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு !

நிதின்சத்யா ஒரு புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில், வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கிறார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.