Cine Bits
வில்லன் நடிகர் குறும்பட டைரக்டர் ஆனார்!

நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற படம், ‘டோரா.’ இந்த படத்தில் வில்லனாக நடித்தவர், ஷான். படம் வெற்றி பெற்றதால், ஷான் பரவலாக பேசப்பட்டார். ஷான் ‘இயக்கி’ என்ற குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறார். இது, கால் டாக்சி டிரைவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம். 26 நிமிடங்கள் ஓடும் இந்த குறும் படத்தை ஷான் இயக்கியிருக்கிறார். “இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்ததும், ‘கால் டாக்சி’ ஓட்டி பயிற்சி பெற்றேன். 500-க்கும் மேல் ‘டிரிப்’ அடித்து அனுபவம் பெற்றேன். கால் டாக்சி டிரைவர்களின் வலியையும், சோகத்தையும் படம் பேசும். உண்மையை ஊரறிய சொல்லியிருக்கிறேன். ‘இயக்கி’ மாதிரி இன்னும் வெளியுலகத்துக்கு தெரியாத வாழ்க்கை நிறைய இருக்கிறது. அதையும் எதிர்காலத்தில் சொல்ல இருக்கிறேன்.