விளம்பரத்திற்காக ராஜா,ராணி கெட்டப்பில் மாதவன், சமந்தா

ஐம்பது வயதை நெருங்கும் மாதவன் இன்றும் இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் அழகையும் நடிப்பையும் பெற்றவர். மேலும் தற்போது மாதவன் அனுஷ்காவுடன் இணைந்து ‘நிசப்தம்’ என்னும் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். தான் எழுதி இயக்கி மற்றும் நடித்த ‘ராகேட்ரி’ என்னும் படத்தின் திரையிடலுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’ படத்தின் தமிழ் தழுவலில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஷிவாடா நாயருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இறுதியாக அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படமான ‘விக்ரம் வேதா’ வில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மியுடன் இணைந்து நடித்தார். அதற்குப் பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவரும் சமந்தாவும் ராஜா-ராணி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வளம் வருகிறது. இது என்ன படம் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வேலையில் , இது ஒரு தேயிலை கம்பெனிக்கான விளம்பரக் குறும்படம் என்று தெரியவந்துள்ளது.