விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பு – கைவிட வலியுறுத்தி மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கோவை, திருச்சி, ஈரோடு உட்பட13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக மின் உயர் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 மாதகாலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 40-க்கு 90 மீட்டர் என்கிற அளவில் அமைக்கப்படுவதால் ஒரு ஏக்கர் 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்,மேலும் இவர்களுக்கு போதிய இழப்பீடும் அரசுத்தரப்பில் வழங்கப்படவில்லை.இதனால் விவசாயிகள் பல முறை போராடி வந்த நிலையில் மின்துறை அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதல்- அமைச்சரை சந்திக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக கம்பிவடம் வழியாக கொண்டு செல்லலாம் இதற்காக 400 கிலோ வாட் மின்சார கம்பிவடங்களை சாலை ஓரம் அமைக்க முடியும். இதேபோல் அண்டைமாநிலமான கேரளாவில் 325 கிலோ வாட் திறன் கொண்ட கம்பிவடம் சாலையோரம் அமைக்கப்பட்டு வருகிறது.உயர்மின் கோபுரத்துக்கு பதிலாக தரையில் கம்பிவடம் வழியாக செயல்படுத்தும் போது 10 சதவீத மின் இழப்பு சேமிக்கப்படுகிறது. இம்முயற்சியை அரசு பரிசீலனை செய்யவேண்டுமென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .