விவசாயிகளுக்காக கட்டிடம் கட்டி கொடுத்த விஜய் சேதுபதி !

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் லாபம் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன். இப்பட விவசாயிகளுக்கு இருக்கும் சர்வதேச பிரச்னை பற்றி கூறும் படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு செட்டு போட ஆகும் செலவில் நிஜ கட்டிடத்தையே கட்டிவிடசொல்லியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அக்கட்டிடத்தை விவசாயிகளிடமே இலவசமாக ஒப்படைத்துவிடும்படி கூறியிருக்கிறார்.