விவசாயி ஒருவரின் கதை ஐஆர் 8

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ், ஜே.கே இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம், ஐஆர் 8. அனீபா, விஷ்வா, பிந்து, அப்புக்குட்டி, கராத்தே ராஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.வி.மணி. இசை, கோண்ஸ். சிங்கமுகம், சொல்ல மாட்டேன் ஆகிய படங்களின்  இயக்குனர் என்.பி.இஸ்மாயில் இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘பிள்ளைகள்  கைவிட்ட நிலையிலும், படித்த இளைஞர்களுடன் சேர்ந்து விவசாயத்தை காப்பாற்றும் விவசாயி ஒருவரின் கதை இது’ என்றார்.