விவேகம் குறித்து இயக்குனர் சிவா அதிரடி பேட்டி! அடுத்த கூட்டணி யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் 'விவேகம்'. இப்படத்தின் அப்டேட் ரசிகர்கள் அனைவரும் எப்போதும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பிற்கு விருந்தாக இந்த வாரம் பிரபல வார இதழில் சிவா பேட்டி வந்துள்ளது. இதில் விவேகம் இண்டர்நேஷ்னல் படம் போல் விஷ்வல் இருக்கும், அஜித் இண்டர்போல் ஆபிஸராக நடிக்கின்றார், காஜல் NRI ஹோம்லி பெண்ணாக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் மிகவும் ரசிகர்களை கவரும், அதேபோல் அக்‌ஷரா தான் படத்தின் அச்சாணி, மேலும், விவேக் ஓப்ராய் வில்லன் இல்லை, ஆனால், ஒரு பவர்புல் கதாபாத்திரம். 95% படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் நடந்தது, அஜித் சார் சூப்பராக பைக் ஓட்டுவார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்படத்தில் அதையும் தாண்டி பல ரிஸ்க் காட்சிகள் இருக்கின்றது. ஒரு பனி மலையில் அஜித் சார் உருண்டு வருவது போல் ஒரு காட்சி, டூப் இல்லாமல் அவரே அதை செய்துக்கொடுத்தார், காலில் அப்போது தான் அறுவை சிகிச்சை முடித்து வந்தார். ஆனால், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நன்றாக நடித்துக்கொடுத்தார், படம் முடியும் நேரத்தில் ‘சிவா உங்களுக்கு திருப்தியா’ என்று தல கேட்க, நானும் ‘இதற்கு மேல் என்ன சார் வேண்டும்’ என்றேன், அதற்கு அவரும் ‘ஐ யம் வெரி ஹாப்பி’ என்று கூறினார் என பல தகவல்களை சிவா பகிர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி இளைய தளபதியுடன் அடுத்தப்படமா? என்று கேட்க, உடனே சிவா ‘விஜய் என்னுடைய நல்ல நண்பர், சிறு வயதில் இருந்து அவரை எனக்கு தெரியும். கண்டிப்பாக அவருடன் கூட்டணி அமைப்பேன்’ என்று கூறியுள்ளார் சிவா.