Cine Bits
விவேகம் படக்குழுவிற்கு மிக சந்தோஷமான நாள் இன்று!
அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. இப்படத்தின் டீசர் இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது படக்குழுவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இதுமட்டுமின்றி படத்தின் வியாபாரமும் அதிக தொகைக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று தொடங்குகின்றதாம், அஜித் இப்படத்தின் டப்பிங்கில் இன்று கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவரவுள்ளதாக என கூறப்படுகிறது.