விவேகம் படத்தின் சர்வைவா படலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா – யோகி.பி கூறிய தகவல் என்ன?

அஜித் நடிப்பில் தயாராகும் 'விவேகம்' பட சர்வைவா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைப்பில் யோகி. பி கூட்டணியில் வெளியான இப்பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாக படக்குழுவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பாடல் பாடியிருக்கும் யோகி. பி இப்பாடல் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், அஜித் சார் பாட்டைக் கேட்டு என்ன கூறபோகிறார் என்று இருந்தேன். அவர் தற்போது அனிருத்திடம் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவ்வளவு அமைதியான அவர் பாட்டை கேட்டு பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். எதற்கும் அவ்வளவாக ரியாக்ட் செய்யாத அவர் பாடல் குறித்து பேசியது சந்தோஷமான விஷயம் என்றார் யோகி. பி.