விவேகம் படம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் உருக்கமன பேட்டி.

தல அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவரும் படம் 'விவேகம்'. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் அஜித் பல ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். இதுக்குறித்து இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில் ‘இந்த படத்திற்கு அஜித் சாரின் உழைப்பு என்பது வார்த்தையில் கூற முடியாது. அவர் ஏற்கனவே அத்தனை அறுவை சிகிச்சை செய்தும், பல காட்சிகளில் டூப் இல்லாம்ல் தான் நடித்தார், மேலும், தனக்கு ஒரு போது டூப் வைப்பது பிடிக்காது என்று சொல்வார். இதற்கு மேல் ஒரு ஹீரோ கஷ்டப்பட முடியுமா, இல்லை வேறு ஹீரோ கஷ்டப்படுவாரா? என்று தெரியவில்லை’ என்று  கூறியுள்ளார்.