விவேகம் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி!

விவேகம் படத்துக்காக, அஜித், 'சிக்ஸ் பேக்' உடலுடன் கூடிய​ 'பர்ஸ்ட் லுக்' ரிலீசானதும், கோலிவுட்டில் அனைவரிடமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதில் அஜித் ரசிகர்கள்,உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், எதிர்தரப்பினரோ, 'இதெல்லாம் கிராபிக்ஸ்' என, சமூக வலைதளங்களில், கேலி செய்துள்ளனர்.

இதனால், கடுப்பான விவேகம் படக்குழுவினர், 'இந்த படத்துக்காக, தினமும், ஐந்து மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்தார் அஜித். இது தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என உறுதியளித்துள்ளனர்