விவேகம் வேற​ லெவல் டீசர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகும் படம் 'விவேகம்'.இப்படதின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தபோது அவரது சிக்ஸ்பேக் உடலை போட்டோஷாப் என்று கூறியவர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் தாங்கள் கூறியது தவறு என்பதை புரிந்து கொள்வர்.

இந்த​ படத்தின் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு பிறதிபலிக்கின்றது.இதில் அஜித் பேசும் வசனமான 'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது' என்ற பஞ்ச டயலாக் இடம் பெறும் காட்சி அட்டகாசத்தின் உச்சம் என்றே கூறலாம்.

இப்படம் பாகுபலி சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.