விவேக்: மக்களே நீதிபதிகள்! நீதி வெல்லும்” ……..

ரஜினிகாந்த் நேற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதற்கு நடிகர் விவேக் டுவிட்டரில் “அவர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த பின் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. அவரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அவர் எம்.ஜி.ஆர் புகழாரம், அவருக்கு செய்த உதவி, மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை என அனைத்தும்  உண்மையாக இருந்தது.”இருப்பினும் அதிமுக, திமுக எனும் இரு இமயங்கள் எதிரில் ! பார்ப்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்” என்று பதிவு செய்துள்ளார்.