விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திற்கு இசை அமைக்கிறார் இளையராஜா !

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் – பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.