விஷாலுக்கு இருக்கும் தில் கமலுக்கு இல்லை — தினகரன்

கமல்ஹாசன்  ஒரு வார இதழில் ஆர். கே.நகர் தொகுதியில் தினகரன்  விலை  கொடுத்து வெற்றி  பெற்றார் என்றும், இதற்கு  மக்கள் உடந்தையாக இருப்பது மிக பெரிய சோகம் என்றும்  கூறியுள்ளார். இதற்கு தினகரன்  மரணம்  அடைந்த  தன் ஆதரவாளர் சந்தானம்   படத்திறப்பு  விழாவிற்கு சென்றபோது  அங்கு செய்தியாளர்களை சந்தித்து  கமலுக்கு பதிலளித்தார். இதில்     அவர் கூறியது நடிகர் விஷாலுக்கு இருக்கும் தில் கமலுக்கு இல்லை என்றும், விஷால் ஆர். கே.நகர் தொகுதியில் துணிச்சலாக  போட்டியிட்ட போது அவரை தடுக்கும் சதி  செய்யப்பட்டது என்றும், அவர் களம்  இறங்கியது போல்  கமலும் போட்டியிட்டுருந்தால்  களம்  என்றால் என்ன என்ற நிலவரம்  தெரிந்திருக்கும்.  கமல், ஜெயலலிதா இல்லாததால் கபடி விளையாடநினைக்கின்றார். கமல்  ரஜினி  ஆகிய இருவரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பே பாகுபாடின்றி அனைத்து  கட்சினரிடம் இருந்தும் எதிர்ப்பு வருவதை மக்கள் அமைதியாக கவனித்து வருவதாகவும், இதன் தாக்கம்  தேர்தலின் போது  தெரியும்  என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.