விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி !

நடிகர் சரத்குமார் மீது கூறிய குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்து இருக்கிறீர்களா என நடிகர் விஷாலுக்கு, நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 23.06.2019 ல் நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். சரத்குமார் தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது உங்களுளகு வெட்கமாக இல்லையா விஷால் ரெட்டி அவர்களே சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும் போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை. இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று வழக்கம் போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் இவ்வாறு நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.