Cine Bits
விஷாலுக்கு முதல் கோரிக்கை வைத்த பிரபல நடிகர் !!!
நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. அவரகள் வெற்றி அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் – சினிமா துறைக்கு இனி வரும் இரண்டு ஆண்டுகள் பொற்காலம் என கூறினார்.
தேர்தலில் வென்ற விஷால் இன்னும் பதவி ஏற்காத நிலையில் நடிகர் சாந்தனு விஷால்க்கு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
“தியேட்டர் உரிமையாளர்கள் சின்ன படங்களை திரையிட ஒப்புக்கொள்வதில்லை என்றும், அவர்கள் மட்டுமே பணம் சம்பாதிப்பதாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் தான் கஷ்டப்படுகிறார்கள்” என்று சாந்தனு குற்றம்சாட்டியுள்ளார்.அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்