விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா

தமிழ் திரையுலகில் ஆர்யாவும் விஷாலும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலின்போது நண்பன் விஷாலுக்காக ஆர்யா செய்த பணிகளுக்கு அளவே இல்லை. இந்நிலையில் திடீரென விஷாலுக்கு எதிராக ஆர்யா களமிறங்குகிறார் என்றால் நம்ப முடியாத​ ஒரு விசயம்.ஆனால் நிஜவாழ்கையில் அல்ல திரையில்தான் விஷாலுக்கு வில்லனாகிறார் ஆர்யா. அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் 'இரும்புத்திரை' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.