விஷாலுடன் இணையும் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் !

சுந்தர். சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இரும்புத்திரை படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இரும்புத்திரை 2 படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் என 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இரும்புத்திரை படத்தை போல், இதன் இரண்டாம் பாகமும் கிரைம் திரில்லராக உருவாகிறது. இதில் நடித்தபடியே, மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் 2விலும் விஷால் நடிக்க இருக்கிறார்.