விஷால் – அனிஷா ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று (16-ந் தேதி) ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.