விஷால் – அனிஷா திருமணம்: தேதியை அறிவித்த விஷால்!

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் விஷால் இருக்கிறார். இந்த நிலையில், விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை மட்டும் விஷால் அறிவிக்கவில்லை. வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், எங்கு நடைபெறும், வரவேற்பு நிகழ்ச்சி எப்போது போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் அறிவித்தபடி, நடிகர் சங்க கட்டிடத்தில் என்றால், அங்கு நடக்கும் முதல் திருமணம் விஷாலின் திருமணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.