விஷால் அனிஷா திருமணம் நிறுத்தம் – நலம்விரும்பிகள் அதிர்ச்சி !

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு தலைவரானார். விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்தாகி விட்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனிஷா நீக்கி உள்ளார். விஷால்- அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். நடிகர் சங்க கட்டிடத்தில் தனது திருமணம் நடக்கும் என்று விஷால் கூறிவந்தார். இந்த நிலையில் விஷால்-அனிஷா திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தெலுங்கு இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் விஷால் மற்றும் அனிஷா குடும்பத்தார் இச்செய்தியை உறுதிப்படுத்தவில்லை.