விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் வருகிற 16 – ஆம் தேதி!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வலம் வருகிறார். அவருடைய நண்பன் ஆர்யாவுக்கு திருமண முடிந்தபின்னும், நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று கூறி வந்தார். இந்நிலையில் நண்பன் ஆர்யாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சாயிஷாவுடன் திருமணம் முடிந்துவிட்டது. மேலும், நடிகர் சங்க கட்டிடமும் முடியும் தருவாயில் உள்ளதால் அவருடைய திருமண பேச்சு மறுபடியும் தலைதூக்கியது. இந்நிலையில் பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர். இந்தவிஷயத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16 -ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. திருமண தேதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.