விஷால் உடல்நிலை வதந்திகள்:நான் நலம்……

நடிகர் விஷால் கடந்த சில நாட்களாக தலைவலியில் அவதிப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நிலையில் டெல்லிக்கு சென்று ஒய்வு எடுத்துக்கொண்டார். இதனை அவரது நலம் விரும்பிகள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவலை பரப்பியுள்ளனர். இதற்கு அவர் தனது டுவிட்டரில் “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனது உடல் நிலை குறித்தும் வதந்திகள் பரவி வருகின்றன.எனது நலம் விரும்பிகள், நண்பர்கள் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆரோக்கியத்துடனும்,உற்சாகத்துடனும் இருக்கிறேன் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும்,சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மார்ச் முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்” என்றும் கூறியுள்ளார்.அவர் தற்போது இரும்புத்திரை,சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில் இரும்புத்திரை படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த மாதம்  வெளியாக உள்ளது.