விஷால் எல்லோரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார் என நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றச்சாட்டு !
வில்லனாக அறிமுகமாகி கதை நாயகனாக வளர்ந்திருப்பவர் ஆர்.கே.சுரேஷ். இவர் நாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது, நடிகர் சங்க தேர்தலில் விஷால் தவிர்த்து வேறு யார் நின்றாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. விஷாலுக்கு எதிராக போட்டியாளரை நிறுத்துவோம். ஜே.கே.ரித்திஷின் கனவை நிறைவேற்றுவோம். விஷால் எல்லாரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார். உதயா, ரித்திஷ், வரலட்சுமி உள்பட நிறைய பேர் இருக்கிறார்கள். வரலட்சுமியை நட்பு ரீதியில் குறிப்பிட்டேன். கார்த்தி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதனை ஏற்போம். இல்லை என்றால் நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி நிச்சயம் போட்டியிடும். ஆனால் நான் போட்டியிட மாட்டேன்”, என அவர் கூறினார்.