விஷால் நாசர் அணிக்கான ஆதரவை வாபஸ் வாங்குவாரா கமல் !

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த், நடிகர்கள் நிதின் சத்தியா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கமலை  நேரில் சந்தித்து நடிகர் சங்க தேர்தலில் அவருடைய ஆதரவை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், நடிகர் கமலை சந்தித்து எங்கள் அணி சார்பில் என்ன செய்ய போகிறோம் என்று தெரிவித்தோம். மேலும் இந்த அணி, அந்த அணி என்பது இல்லை. யாராக இருந்தாலும் கட்டிடம் நல்லபடியாக வர வேண்டும் அது தான் தன்னுடைய எண்ணம் என்று கமல் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு என்னை அழைப்பதற்கு பதிலாக கட்டிட திறப்பிற்கு அழையுங்கள் அதுதான் எனக்கு வேண்டும் என கமல் தெரிவித்ததாக பாக்யராஜ் கூறினார். அநேகமாக கமல் விஷால், நாசர் அணிக்கான ஆதரவை வாபஸ் வாங்கிடுவார் என நம்பப்படுகிறது.