Cine Bits
விஷால் படத்தில் பாடிய தனுஷ்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து சுப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி,ராஜ்கிரண், சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் சிறந்த பாடலாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், விஷால் படத்தில் தனுஷ் பாடியது இதுவே முதன்முறை ஆகும்.