விஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2

துப்பறிவதை களமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லராக கடந்த 2017 -ல் இயக்குநர் மிஷ்கின் இயக்கி விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இப்படம் உருவாகியிருந்தது. இதில் விஷாலுடன் இணைந்து வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே இதனைத் தயாரித்திருந்தார். ஆரோல் கரோலியின் பின்னணி இசை துப்பறிவாளன் படத்துக்கு வலு சேர்த்திருந்தது. படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான லாபத்தையும் ஈட்டித் தந்தது. இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் இயக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.