Cine Bits
விஸ்வரூபம் படத்தின் நஷ்டம் இத்தனை கோடியா..! அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட கமல்

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் கமல் சமீப காலமாக சமூக பிரச்சனைகள் மட்டுமின்றி அரசியல் பிரச்சனைகள் பற்றியும் துணிவுடன் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் தன் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது அரசு ஏற்படுத்திய தடையால் தனக்கு 60 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். 'மறதி ஒரு தேசிய நோய். என பிரச்சனை பற்றி மக்கள் மறந்துவிட்டார்கள், ஆனால் நான் மறக்கமாட்டேன். எந்த வருமானத்தையும் மறைக்காமல் நேர்மையாக வரி செலுத்தும் குடிமகன் நான், எனக்கு இது பெரிய இழப்புதான்” என தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் 2 படம் எந்த சிக்கலும் இன்றி வெளிவரும் என கமல் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.