விஸ்வாசம், மெர்சல் பட புகழ் நடிகை சுரேக்காவின் கணவர் திடீர் மரணம் !

அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மெர்சல் போன்ற படங்களில் சின்ன வேடத்தில் நடித்தவர் சுரேக்கா. இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாவார். கணவர் சுரேஷ் தேவாவுக்கும், இவருக்கும் சுரேக்காவுக்கும், சுப்ரிகா என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இவரது மரண செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.