வி.எஸ்.ஜெயக்குமார்:ஆதி படத்திற்கு புகார்

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய “ஆதி” என்ற படத்தில் மோகன்லால் மகன் பிரனவ்  நடித்துள்ளார். இந்த படம் வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இயக்குனர் எதிர்பார்த்தது போலவே,கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.ஜெயக்குமார் “வீக் என்ட்  பார்ட்டி” என்ற புத்தகத்தில் 2011 ம் ஆண்டு தான் எழுதிய கதையை அவர் ஆதி என்று படமாக்கியுள்ளார் என முதல்வருக்கு புகார் அளித்துள்ளார். இதனை மறுத்துள்ள இயக்குனர், ஆதி படம் தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்து உருவாக்கிய கதை என கூறியுள்ளார். இதே போல் இவர் இயக்கிய 'த்ரிஷ்யம்' படத்தையும் தன்னுடைய கதை என்று ஒருவர் நீதிமன்றத்தில் கூறியபோது, இயக்குனர் ஜீத்து  ஜோசப்புக்கே வெற்றி கிடைத்தது.