வீட்டை அபகரிக்க முயற்சி – சங்கீதா மீது தாய் புகார்
பிதாமகன், தனம், உயிர், காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சங்கீதா. பாடகர் கிரிசை திருமணம் செய்து கொண்டுள்ளார். சங்கீதா மீது அவரது தாய் பானுமதி வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார்’ என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இரு நாட்களுக்கு முன் கணவர் கிரிசுடன் ஆணையத்தில் ஆஜரானார். சங்கீதாவின் அம்மா பானுமதியின் புகார் குறித்து போலீசார் கூறியதாவது, எம்.ஜி.ஆரை வைத்து பத்து படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள் தான் பானுமதி. இவர் சென்னை வளசரவாக்கத்தில் இப்போது குடியிருக்கின்ற வீடு தன் மாமனார் வீட்டு வழியில் வந்த சொத்து. அந்த வீட்டில் இப்போது பானுமதி தரை தளத்திலும் சங்கீதா மாடியிலும் குடியிருக்கிறார்கள். அந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை தன் அண்ணன், தம்பி அபகரித்துவிடுவார்கள் என்று சங்கீதாவுக்கு சந்தேகம். அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். ஆணையத்தில் ஆஜரானது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு. சினிமா தொடர்பான விஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட விஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.