Cine Bits
வெங்கட் இயக்கும் வெப்சீரிஸில் காஜல் அகர்வாலுக்கு ஜோடியாக வைபவ் !
டைசியாக நடிகை காஜல் அகரவால் விஜய்யின் மெர்சல் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்தியன் 2 ல் கமலுடன் நன்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். இதனிடையே வெப் சீரிஸ்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கவுள்ள ஒரு வெப் சீரிஸில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர் வைபவ் தான் இந்த சீரியலில் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு படம் இயக்கவிருந்தார். ஆனால் அது தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்கட் பிரபு வெப் சீரிஸ் இயக்க முடிவெடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.