வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள படத்துக்கு கிடைத்த வரிவிலக்கு

2007 ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து  படம் சென்னை 600028. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இப்படத்திலும் உள்ளனர். இப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கங்கை அமரன் சென்சார் அமைப்பில் உள்ளதால் இப்படத்துக்கு எளிதில் கிடைத்துள்ளது என்று பேசப்பட்டு வருகிறது. தற்போது  இப்படத்தை தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது