வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’…

வெங்கட் பிரபு இயக்கும் படம் 'பார்ட்டி'.  சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், 'மிர்ச்சி' சிவா, கயல் சந்திரன், ரெஜினா கெசண்டரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இந்த படத்தின் பூஜை நேற்று காலையில் எளிமையாக நடைபெற்றது.  'பொதுவாக படத்துக்கு பூஜை போட்டா பார்ட்டி வைப்பாங்க, ஆனால் முதல் தடவையா பார்ட்டிக்கு பூஜை போட்டிருக்கோம்' என்று தனது வழக்கமான ஸ்டைலில் காமெடியாக இந்த பூஜை குறித்து டுவீட் செய்துள்ளார் வெங்கட் பிரபு. வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசை அமைப்பார். ஆனால் பிரேம்ஜியே பார்ட்டி படத்துக்கும் இசை அமைக்கிறார்.