வெங்கட் பிரபு ராகவா லாரன்ஸ் இணையும் புதிய படம் !

சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்கவிருந்த மாநாடு பலவித சர்ச்சைகளுக்கு பிறகு படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமே. இந்நிலையில் வெங்கட் பிரபு தந்து டிவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடவுள் இரக்கம்முள்ளவர், நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம் அதனால் தான் இது நடந்துள்ளது. அப்டேட்ஸ் விரைவில் என கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்கிவருகிறார். வெங்கட் பிரபுவின் இந்த டிவிட்டர் பதிவை பார்க்கும் பொழுது விரைவில் ராகவாவும், வெங்கட் பிரபுவும் இணைவார்கள் ஏன் தெரிகிறது.