வெப் சீரிஸில் நடிக்கவிருக்கும் பூர்ணா !

ரம்யா கிருஷ்ணன் , சோனியா அகர்வால், மீனா, தமன்னா, நித்தியா மேனன், பிரியா மணி, சுகன்யா என முன்னணி நடிகைகள் வெப் சீரியலுக்கு வந்து விட்டார்கள். இந்த வரிசையில் பூர்ணாவும் வந்திருக்கிறார். ஜீ 5 நிறுவனம் வெளியிடும் கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூர்ணா. இதில் இவருடன் விவேக் பிரசன்னா, அம்சாத் கான், ஆர்த்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவினாஷ் ஹரி ஹரன் இயக்கியுள்ளார். காதுகேளாத, வாய் பேசமுடியாத மகளை தொலைத்துவிடும் பூர்ணா அவளைத் தேடி அலைவதும் அந்த தேடலில் அவர் சந்திக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் தான் கதை.