வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகர் நடிகைகள் !

நித்யாமேனன் ‘பிரீத்’ என்ற வெப் தொடரிலும் பிரியாமணி ‘பேமிலிமேன்’ தொடரிலும் நடிக்கின்றனர். பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோரும் வெப் தொடருக்கு வந்துள்ளனர். பிரசன்னா ஏற்கனவே வெப் தொடரில் நடித்துள்ளார். பரத், ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் வெப் தொடரில் நடிக்கின்றனர். இப்போது புதிதாக மீனாவும் ‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் தொடரில் நடிக்க வந்துள்ளார். இதில் ஜியோர்ஜியா அன்ரியானியும் முக்கிய வேடத்தில் வருகிறார். அதிரடி மற்றும் நகைச்சுவை தொடராக தயாராகிறது. இதுபோல் மனிஷா கொய்ராலா ‘மஸ்கா’ என்ற இந்தி வெப் தொடரில் நடிக்கிறார். நடிகையாக நான் பெருமைப்படும் வகையில் இந்த தொடர் இருக்கும் என்று அவர் கூறினார்.