வெப் தொடரில் மாதவன்,பாபிசிம்ஹா….

தொலைக்காட்சி தொடர்களைப்போல் தற்போது இணையதளத்தில் வெப் தொடர்கள்  பிரபலமாகி வருகின்றன. அமெரிக்காவில் அதிக அளவில் இணையதள தொடர்கள் தயாராகின்றன. இது திரைப்படங்கள்போல் அதிக செலவில் இவற்றை தயாரித்து வெளியிடுகின்றனர். தற்போது இந்தியாவிலும் வெப் தொடர் தயாரிக்க தொடங்கி உள்ளனர். இந்தியில் உருவாகும் புதிய  வெப் தொடரில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதே போல் தமிழில் தயாராகும் வெப் தொடரில் நடிகர் பாபிசிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.