வெப் தொடர்களுக்கு மாறி வரும் நடிகர்-நடிகைகள்

ஹாலிவுட்டில் அதிக வெப் தொடர்கள் இடம் பெற்று வருகின்றன. இதற்கு ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் அலைமோதிக்கொண்டு இருக்கின்றனர். டிஜிட்டல் துறையின் அடுத்த வளர்ச்சியாக இணையதள தொடர்கள் என்ற ‘வெப் சீரீஸ்’கள் உருவெடுத்துள்ளன. முன்னணி நடிகர்-நடிகைகள் இதில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

மகாபாரதம் கதை வெப் தொடராக 7 பாகங்களில் தயாராகிறது. இதில் கிருஷ்ணர் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். இந்தி நடிகர்கள் மட்டுமின்றி தமிழ் நடிகர்களும் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

இப்போது தமிழிலும் வெப் தொடர்கள் அதிகம் தயாராகின்றன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை சிலர் சினிமா படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கெளதம் மேனன் இதை வெப் தொடராக எடுப்பதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.