வெப் தொடர் மூலம் ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேருகிறார் ராதிகா ஆப்தே !

ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தோனி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிப்பதாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவர் இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்குடன் வெப் தொடர் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகி உள்ளார். ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் 2000-ம் ஆண்டு டாம்குரூஸ் நடித்து திரைக்கு வந்த ‘மிஷன் இம்பாசிபிள் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடரில் சார்லி ஹுன்னம் என்ற ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார். டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. ஆஸ்திரேலியா சிறையில் இருந்து தப்பும் நாயகன் மும்பை பகுதியில் குடியேறி அந்த பகுதி மக்களுக்கு உதவுவதே இந்த தொடரின் கதை. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.