Cine Bits
வெற்றிப்பாதையில் மொட்டை ராஜேந்திரன் !
பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் காமெடி வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் ‘ராபின்ஹுட்’ என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். அசுரன், ராட்சசன் படங்களில் நடித்த அம்மு அபிராமி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.