வெற்றிமாறனின் அடுத்த படத்தின் ஹீரோ பரோட்டா சூரி !

வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சீரியஸான படங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு நகைச்சுவைப் படம் எடுக்க இருப்பதாகவும் அந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கோ மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா படங்களின் தயாரிப்பாளரான எல்ரெடு குமார் தனது ஆர்.எஸ்.இன்ஃபொடெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தைத் தற்போதைக்குக் கிடப்பில் போட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.