வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சூர்யா

காப்பான் படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார். அடுத்த ஆண்டு ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதில் நடித்தபடியே வெற்றிமாறன் படத்திலும் அவர் நடிப்பார் என தெரிகிறது. அசுரன் படத்துக்கு பிறகு சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் வெற்றி மாறன். இது குறுகிய கால தயாரிப்பாக உருவாகிறது. அதன் பின்னர் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை அவர் இயக்க பேச்சு நடக்கிறது. காப்பான் படம் கலவையான விமர்சங்களை கண்டது. வியாபார ரீதியாக கையை கண்டிக்கவில்லை. அதனால் சூர்யாவுக்கு அடுத்த படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக கொடுத்தேதீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வெற்றிமாறனுடன் கைகோர்த்திருக்கும் சூர்யாவிற்கு வெற்றி கனி கிடைக்குமா? பொறுத்திருந்து பாப்போம்.