வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்த பிக் பாஸ் சீசன் 1 நடிகர் !

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் அபிமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதிலும் தனுஷை வைத்து இவர் இயக்கியிருந்த வடசென்னை திரைப்படமும் அசுரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு மாபெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது இந்த நிலையில் இந்த படத்தில் இருந்தது நடிகரும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளரான சக்தி கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை போன்ற பல்வேறு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சக்தி. ஆனால், இவரது படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இவரது 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் கலந்து கொண்ட இவருக்கு ட்ரிகர் சக்தி என்று பெயரும் வந்தது. பிக் நிகழ்ச்சிக்குப் பின்னர் சிவலிங்கா, ஏழு நாட்கள் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார் சக்தி.